பழைய இடுகைகள்
-
▼
2009
(39)
-
►
November
(34)
- இறக்குமதியாகும் அசல் வில்லன்
- அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்
- அஜித்தின் ஸ்கிரிப்ட் ரைட்டர்
- சமீராவின் அசல் கேரக்டர்
- அசல் சூட்டிங் ஓவர்! பத்திரிகையாளர்களை சந்திக்கிறார...
- அசல் படபிடிப்பு
- அசல் பாட்டு
- அசல் heroine சமீரா ரெட்டி
- அசல் படத்தில் சுரேஷ்
- Theatreowner and ticket seller CHAT
- 'தல' கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சியிலிருந்த...
- அஜீத்தை மாற்றிய சூப்பர் ஸ்டாரின் வைர வார்த்தைகள...
- சென்னையில் அசல் <!--@@ArticleSear...
- அஜித் - சில 'அசல்' பக்கங்கள் "தினமும் தயிர்சாத...
- கவுண்டமணி - விஜய்
- நகல் அல்ல அசல்!
- No title
-
►
November
(34)
வழக்கமாக கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகள் பிற படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுவார்கள். ஆனால், பிரபல நடிகர் ஒருவர் இன்னொரு பிரபல நடிகரின் படத்தில் நடனமாடி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்த உள்ளார். தமிழ் சினிமாவில் எப்போதாவது நடிக்கும் அதிசயங்களில் இதுவும் ஒன்று. அந்த நடிகர் வேறு யாருமில்லை நடிகர் சிலம்பரசன்தான். அவர் சிறப்பு நடனம் ஆடவுள்ள படம் தலை அஜீத்தின் அசல்.
சிம்பு சமீப காலமாக தீவிர அஜீத் ரசிகராகி விட்டார். தனது படம் ஒன்றில் அஜீத் ரசிகராகவே அவர் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அஜீத்துடன் இணைந்து ஒரு படத்தில் தலை காட்டுகிறார்.
சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வரும் படம் அசல். அஜீத் நாயகன். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு அஜீத்துடன் இணைந்து ஆடுகிறாராம் சிம்பு. படத்தின் ஹைலைட்டாக இந்தப் பாடல் இருக்குமாம். ஏற்கனவே சில ஹீரோக்களுக்காக பாடல்கள் பாடியுள்ளார் சிம்பு. ஆனால் தற்போதுதான் இன்னொரு முன்னணி ஹீரோவுடன் இணைந்து திரையில் தோன்றுகிறார்.
அதேபோல தனது நண்பரான எஸ்.ஜே.சூர்யா தெலுங்கில் இயக்கி வரும் புலி படத்தில், சூர்யாவின் கோரிக்கைக்கேற்ப ஒரு பாடலுக்கு ஆடியுள்ளாராம் சிம்பு. படத்தின் நாயகன் பவன் கல்யாணுடன் இணைந்து இந்த பாடலில் ஆடுகிறாராம் சிம்பு.
இந்த புலி படத்திற்கு இன்னொரு பின்னணிக் கதை உள்ளது. முதலில் இதை தமிழில் விஜய்யை வைத்துத்தான் இயக்குவதாக இருந்தார் சூர்யா. விஜய்யும் சம்மதித்து எல்லாம் ரெடியான நிலையில் திடீரென நடிக்க மறுத்து விட்டார் விஜய்.
என்ன காரணம் என்று அப்போது கூறப்பட்டது என்றால் - புலி கதையில் சிம்புவின் ஆலோசனையின் பேரில் பல மாற்றங்களை செய்தி ருந்தார் எஸ்.ஜே.சூர்யா . இதனால் அப்செட் ஆன விஜய் புலிக்கு கும்பிடு போட்டு விட்டாராம்.



குடியரசு தினத்தில் அசல் படம் ரீலிஸ் ஆகவுள்ளது. அஜித் - பாவனா நடிக்கும் புதிய படம் அசல். சிவாஜி புரொடக்ஷன் தயாரித்து வரும் இப்படத்தின் சூட்டிங் முடித்துவிட்ட நிலையில் பாடல் காட்சிக்காக வெளிநாடு செல்லவிருக்கிறார்கள்.
இந்தப் பொங்கலை அஜித்தின் அசலுடன் ‘தல’ப் பொங்கலாக கொண்டாடலாம் என்றிருந்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் காத்திருக்கிறது. பொங்கலுக்கு அசல் வெளியாகவில்லை என்று கசிந்திருக்கும் செய்திதான் இந்த ஏமாற்றத்துக்கு காரணம்.
சரண், அஜித், பரத்வாஜ் காம்பினேஷனின் நான்காவது படம், அசல். பழி வாங்கும் கதையான இதில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார் அஜித். அவருக்கு ஜோடி சமீராரெட்டி. படத்தில் பாவனாவும் உண்டு. அஜித்துடன் இரண்டு பாடல்கள் இருப்பதால் நான்தான் நாயகி என கூறி வருகிறார் பாவனா.
சிவாஜி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டன. படத்தை பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம். தற்போது அதில் சின்ன மாற்றம்.
பொங்கலுக்குப் பதில் ஜனவரி 26 குடியரசு தினத்தில் படத்தை வெளியிடலாம் என தயாரிப்பாளர்கள் தரப்பில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறதாம். இரண்டு பாடல் காட்சிகள் மற்றும் சில டாக்கி போர்ஷன்கள் முடிக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த தாமதம் என்று கூறப்படுகிறது.
கடைசி நேரத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய பொங்கலுக்கே படம் வந்தாலும் ஆச்சரியமில்லை.....

பழி வாங்கும் கதையாக அசல் உருவாகி வருகிறது. அஜித்தின் வித்தியாசமான தோற்றம் படத்தின் மற்றுமொரு பிளஸ்.
வில்லன் படத்தின் கதை மற்றும் வசனத்தை யூகிசேது எழுதியிருந்தது பலருக்கும் தெரிந்திருக்கும். இந்தப் படத்தின் வசனங்களையும் அவரே எழுதியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் காமெடி வேடம் ஒன்றிலும் நடித்திருக்கிறார்.
அந்த வேடத்துக்கு அவர் கொடுத்திருக்கும் பெயர், சமோசா.
"வாரணம் ஆயிரம்' மூலம் தமிழில் அறிமுகமான சமீரா ரெட்டி, இப்போது அஜீத்துடன் "அசல்' படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பிரான்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வருகிறது. "பிரான்சில் இருக்கும் இந்திய தூதகரத்தில் கலாசார பிரிவில் பணியாற்றுபவராக நடிக்கிறேன். இதுவரை செய்யாத ஒரு கேரக்டர். மேலும் துணிச்சலான கேரக்டர். ஹைடெக் தோற்றத்தில் வருகிறேன். பாரீஸ், லயான் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது பிரெஞ்ச் மொழியில் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பள்ளியில் பிரெஞ்ச் பாடம் படித்தது இப்போது கை கொடுத்து விட்டது. எளிமையாக பேசி நடிக்க முடிந்தது. "வாரணம் ஆயிரம்' படத்தைப் போல் அசலும் நிறைவான படமாக இருக்கும். தமிழில் நிறைய படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது' என்றார் சமீரா.
வெளிநாட்டு சூட்டிங்கை முடித்து திரும்பிய அசல் படக்குழுவினர் சமீப காலமாக சென்னையில் முகாமிட்டு சூட்டிங்கை நடத்தி வருகிறார்கள். ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்த சூட்டிங்கில் அஜித், பாவனா பங்கேற்று நடித்தனர். முக்கியமான காட்சியொன்று தி.நகரில் உள்ள சிவாஜி கணேசனின் வீட்டில் படமாக்கப்பட்டுள்ளது. அசல் படத்தின் ஒட்டுமொத்த காட்சிகளும் படமாக்கப்பட்டு முடித்துள்ள நிலையில் தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. பொங்கலுக்கு அசலை வெளியிட திட்டமிட்டிருக்கும் அசல் குழுவினர், இதற்கான அறிவிப்பை வெளியிடவும், அசல் குறித்து பகிர்ந்து கொள்ளவும் பத்திரிகையாளர்களை சந்திக்கவிருக்கிறார்கள். அநேகமாக டிசம்பர் 15ம்தேதி அஜித் மற்றும் அசல் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்திப்பார்கள் என தெரிகிறது.
எந்த சுரேஷ் என்று புருவம் சுருக்குகிறவர்களுக்கு... பன்னீர் புஷ்பங்கள் படத்தில் அறிமுகமாகி தடதடவென 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அதே பழைய ஹீரோ சுரேஷ்தான்.
வழுக்கை விழுந்து வாழ்க்கையில் குடும்பம், மனைவி, பிள்ளைகள் என செட்டிலானவர் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார், படம் அசல்.
சிவாஜி புரொடக்ஷன் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அதிகமும் வெளிநாடுகளில் நடந்து வருகிறது. படத்தை சரண் இயக்குகிறார். இதுவொரு பழிவாங்கும் கதை. அஜித்துக்கு ஜோடி சமீரா ரெட்டி.
இந்தப் படத்தில் சுரேஷ் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். கலர்ஃபுல் விக்குடன் அவரது கெட்டப்பே மிரட்டுகிறது. இனி தொடர்ந்து படங்களில் நடிப்பதென முடிவு செய்திருக்கிறாராம்.
seller: Sir vettaikaran film ticket evloku sales panlam.... yarum vanga matranga..
Theatreowner: rs.10 kudunga apa naraya sales agum
seller: Aiyo apa namaku collection varathey
Theatreowner: ellarum theatre kula poita.. half an hour apram....... veliya porathuku
ticket kudunga .....apram parunga antha ticket 500 rs varaikum
pogum....
seller: super idea sir
அஜீத்தை மாற்றிய சூப்பர் ஸ்டாரின் வைர வார்த்தைகள்!
“நமக்கு எது விதிக்கப்பட்டிருக்கோ அது தானா கிடைக்கும்” - அஜீத்தை மாற்றிய சூப்பர் ஸ்டாரின் வைர வார்த்தைகள்!இது பற்றி முன்னமே உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும், நண்பர்களின் தளங்களில் படித்திருப்பீர்கள். இருப்பினும் அது ஒரு ஆச்சரியமான விஷயம் என்பதால் ஒரு சிறிய ரீவைண்ட். “சூப்பர் ஸ்டார் கற்கும் பாடம்” பற்றிய பதிவில் நண்பர் ஒருவர் அளித்த கமெண்டை பார்த்த பிறகு எனக்கு இது தோன்றியது. பிற்சேர்க்கையாக தரவேண்டியதை அப்படியே ஒரு தனி பதிவாக தருகிறேன்.
அஜீத்திடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
தொடர் தோல்வியால் துவண்டு போயிருந்த அஜீத்திடம், பில்லா ரீமேக் ஐடியாயாவை சிலர் கூறினார்கள். இதையடுத்து சூப்பர் ஸ்டாரிடம் அனுமதி கேட்டு அவரின் ஆசி பெறுவதற்கு அவரை நேரில் சந்தித்தார் அஜீத்.
பின்பு அஜீத்திடம், “நமக்குன்னு எது விதிக்கப்பட்டிருக்கோ அது நமக்கு தவறாம கிடைக்கும். அதனால் நாம் எதுக்கும் அலட்டிக்கவோ கவலைப்படவோ கூடாது. நம்ம வேலைய நாம பாட்டுக்கு செஞ்சிகிட்டு போய்கிட்டே இருந்தா போதும். மத்தது தானா நடக்கும்” என்றார்.
மனநிறைவுடன் வீடு திரும்பிய அஜீத், ரஜினி பரிசளித்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார். முதலில் புத்தகத்தை ஆர்வமின்றி படிக்க துவங்கிய அஜீத் பிறகு, பக்கங்களை புரட்ட புரட்ட அசந்தேபோய் விட்டார். அவருக்கு தேவை எதுவோ அது அந்த புத்தகத்தில் கிடைத்தது. புத்தகத்தை முடித்த போது அவர் முழுதும் மாறிவிட்டிருந்தார். “இந்த மாற்றத்திற்கு காரணம் ரஜினி சார் தான்” என்றும் வெளிப்படையாக கூறினார்.
வாழ்க்கையிலும் கேரியரிலும் சூப்பர் ஸ்டார் கூறியதை ஓரளவு பின்பற்ற துவங்கினார். அவர் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் மெல்ல நடக்க ஆரம்பித்தது. பில்லா சூப்பர் ஹிட்டானது. அஜீத் தந்தையானார். (பில்லா ரிலீசின்போது தொலைக்காட்சிகளில் விரிவான பேட்டியளித்தார் அஜீத். அதில் சூப்பர் ஸ்டார் பற்றியும் அதில் நிறைய பேசினார்.)
இப்போது இந்த அஜீத் அதிகம் பேசுவதில்லை. பில்டப்புகளில் ஈடுபடுவதில்லை. இந்த அஜீத்தை அனைவருக்கும் பிடித்திருக்கிறது.
திருவள்ளுவர் கூறுவது போல,
“அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்” - குறள்
பொருள்: “அறிவிலும் அனுபவத்திலும் தம்மிலும் சிறந்த பெரியோரை போற்றி, மதித்து, தமது நட்பாக்கிகொள்ளுதல் என்பது பெறுவதற்ககரிய பேறுகள் எல்லாவற்றிலும் அரியது”
சூப்பர் ஸ்டாருடன் இவரது அணுகுமுறை விஷயத்தில் இந்த குறள் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
மலேசியா மற்றும் பாரிஸில் படப்பிடிப்பை நிறைவு செய்த அசல் யூனிட் அடுத்து லேண்ட் ஆனது சென்னையில். சென்னை அண்ணாமலைபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. பிறகு படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு மாற்றப்பட்டது.
இங்குதான் அந்த புகழ்மிக்க சந்திப்பு நடந்தது. அசல் படப்பிடிப்பு நடந்த நேரம் சுறா படப்பிடிப்புக்காக விஜய்யும் அங்கிருந்திருக்கிறார். இதனை கேள்விப்பட்ட அஜித் விஜய்யை சென்று சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். ஏறக்குறைய மூன்று வருடங்களுக்குப் பின் நடந்த சந்திப்பு இது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவிலும் சில காட்சிகளை எடுக்க சரண் திட்டமிட்டுள்ளார். சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
அஜித் - சில 'அசல்' பக்கங்கள்
விபத்தில் பாதிக்கபட்டது காரணமாக அவரால் சினிமாவில் முழு கவனம் செலுத்த முடியாததும் ஒரு காரணம். அதன் பின்னர், ரஜினி அவர்களின் ஆசியோடு 'பில்லா'வில் மீண்டும் எழுச்சி பெற்ற அஜித்துக்கு அதன் பின் வந்த 'ஏகன்' ஒரு சிறு சறுக்கல்.
கவுண்டமணி: ச்சே.. போன எடுத்தா நச்சு நச்சுன்னுராங்கப்பா.. ஏதோ வில்லுன்னு விஜய் படமாம்.. அத விஜய் ரசிகங்களாலேயே பார்க்க முடியலையாம்.. என்ன பாக்க சொல்றாங்க.. அட இது பரவா இல்ல.. சோசியல் மேட்டர், பண்ணிக்கலாம்.. ஆனா விஜய் பாட்டுக்கெல்லாம் என்ன ஆட சொல்றாங்கப்பா.. நான் என்ன விஜய் மாதிரி ஆடுகாலியா இல்ல பரதேசியா? ஒரே குஷ்டமப்பா.. ச்சீ... கஷ்டமப்பா..
விஜய்: ங்கண்ணா.. போன் வயரு பிஞ்சு ஒரு வாரம் ஆகுதுங்கன்னா..
கவுண்டமணி: ஹே ஹே.. ஹெய்ஹெய்.. டே டப்சா தலையா.. இது செல்போன்டா.. உன்னயல்லாம் ஹீரோவா போட்டு படம் எடுக்குறான் பாரு அவன சொல்லணும்..
விஜய்: போங்கண்ணா.. உங்களுக்கு ஒரே குறும்பு.. கம்பெனி சீக்ரட் எல்லாம் வெளியில சொல்லிக்கிட்டு.. சரி சரி.. இப்போ நம்ம பாட்ட கேளுங்க..
"ஹே ராமா ராமா ராமன்கிட்ட வில்ல கேட்டேன்
பீமா பீமா பீமன்கிட்ட கதைய கேட்டேன்
முருகு முருகு முருகன்கிட்ட மயில கேட்டேன்..
ஈசன் ஈசன் ஈசன் கிட்ட மலைய கேட்டேன்"
கவுண்டமணி: நிறுத்துடா ஆப்பிரிக்கா வாயா.. இவ்வளவு கேட்டியே.. பிரபுதேவாகிட்ட கதை என்னன்னு கேட்டியா?
விஜய்:??!





















