ASAL film latest news

அசல் தொடர்பான தமிழ் செய்திகள், வீடியோ, படங்கள்.

http://www.india-forums.com/images/celebrity/l_2644.jpg
பேராண்மையில் வில்லனை வெளிநாட்டிலிருந்து கூட்டி வந்தார்கள்... ஒரு ஜெயம் ரவி படத்திற்கே இவ்வளவு பண்ணும் போது நாங்க எவ்வளவு பண்ணுவோம்... என்கிற விதமாக அசல் படத்தை இயக்கி வரும் சரண் வில்லனை... ஹோலிவுட்டில் இருந்து கூட்டி வராமல் பாலிவுட்டில் இருந்து கூட்டி வந்திருக்கிறார். இந்த வில்லன் வேறுயாரும் அல்ல. பிரபுதேவாவின் மிஸ்டர் ரோமியோ படத்தில் வில்லனாக நடித்த அதே சுரேந்திரபால் தான். இவர் அமிதாப்பச்சன் முதல் ஹ்ரித்திக் ரோஷன் வரை ஏகப்பட்ட இந்தி பிரபலங்களின் படங்களில் வில்லனாக நடித்தவர். இவர் மிஸ்டர் ரோமியோவைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிக்கும் தமிழ் படம் இது. இது பற்றி இந்த வில்லன் நடிகர் ‘சரண் அமைதியாக இருந்தாலும் அவர் படங்கள் ஆக்ரோஷமாக இருக்கும்... அந்த வகையில் இந்தப் படமும் ஆக்க்ஷன் படமாக இருக்கும். அஜித் நல்ல திறமையான நடிகர். அஜித்தும் சரணும் இந்தப் படத்தில் இணைவதால் நிச்சயம் இந்தப் படம் வெற்றிப் படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தப் படத்திற்குப் பிறகு தமிழில் எனக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்...’ என்று சொல்கிறார்.

0 விமர்சனம்:

Post a Comment