பழைய இடுகைகள்
-
▼
2009
(39)
-
▼
November
(34)
- இறக்குமதியாகும் அசல் வில்லன்
- அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்
- அஜித்தின் ஸ்கிரிப்ட் ரைட்டர்
- சமீராவின் அசல் கேரக்டர்
- அசல் சூட்டிங் ஓவர்! பத்திரிகையாளர்களை சந்திக்கிறார...
- அசல் படபிடிப்பு
- அசல் பாட்டு
- அசல் heroine சமீரா ரெட்டி
- அசல் படத்தில் சுரேஷ்
- Theatreowner and ticket seller CHAT
- 'தல' கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சியிலிருந்த...
- அஜீத்தை மாற்றிய சூப்பர் ஸ்டாரின் வைர வார்த்தைகள...
- சென்னையில் அசல் <!--@@ArticleSear...
- அஜித் - சில 'அசல்' பக்கங்கள் "தினமும் தயிர்சாத...
- கவுண்டமணி - விஜய்
- நகல் அல்ல அசல்!
- No title
- பொங்கலுக்கு அசல்
- கிழக்கு ஆப்ரிக்க பத்திரிகையில் அசல் அஜித்தின் புகை...
- அஜீத்+ சிம்பு +அசல்
- அசல் - வேட்டைக்காரன் போட்டியில்லை? ...
- அஜீத்தின் 'அசல்' பட பாடல் ஒலிப்பதிவு: பரத்வாஜின் ப...
- அசல் அஜித்தின் புதிய புகைப்படங்கள்
- அஜித்தின் அசல் ரஜினி நேரில் வாழ்த்து !
- அசல் புதிய தகவல்கள்
- அஜித்தின் 50வது பட தயாரிப்பாளர்
- அஜித் குமார் நடித்த திரைப்படங்கள் ஆண்டு படம் பாத...
- அசல் அசல் இயக்குனர் சரண் தயாரிப்...
- ‘Billa’ awarded as Stylish Film of 2008 News Oct...
- Yughi Sethu makes it into ‘ASAL’ News November 1...
- Ajith Asal Movie launched Ajith Asal Mo...
- Ajith at Sri SKandashramam Photos
- Ajith's 50th film to be directed by KV A...
- No title
-
▼
November
(34)
இந்தப் பொங்கலை அஜித்தின் அசலுடன் ‘தல’ப் பொங்கலாக கொண்டாடலாம் என்றிருந்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் காத்திருக்கிறது. பொங்கலுக்கு அசல் வெளியாகவில்லை என்று கசிந்திருக்கும் செய்திதான் இந்த ஏமாற்றத்துக்கு காரணம்.
சரண், அஜித், பரத்வாஜ் காம்பினேஷனின் நான்காவது படம், அசல். பழி வாங்கும் கதையான இதில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார் அஜித். அவருக்கு ஜோடி சமீராரெட்டி. படத்தில் பாவனாவும் உண்டு. அஜித்துடன் இரண்டு பாடல்கள் இருப்பதால் நான்தான் நாயகி என கூறி வருகிறார் பாவனா.
சிவாஜி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டன. படத்தை பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம். தற்போது அதில் சின்ன மாற்றம்.
பொங்கலுக்குப் பதில் ஜனவரி 26 குடியரசு தினத்தில் படத்தை வெளியிடலாம் என தயாரிப்பாளர்கள் தரப்பில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறதாம். இரண்டு பாடல் காட்சிகள் மற்றும் சில டாக்கி போர்ஷன்கள் முடிக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த தாமதம் என்று கூறப்படுகிறது.
கடைசி நேரத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய பொங்கலுக்கே படம் வந்தாலும் ஆச்சரியமில்லை.....

பழி வாங்கும் கதையாக அசல் உருவாகி வருகிறது. அஜித்தின் வித்தியாசமான தோற்றம் படத்தின் மற்றுமொரு பிளஸ்.
வில்லன் படத்தின் கதை மற்றும் வசனத்தை யூகிசேது எழுதியிருந்தது பலருக்கும் தெரிந்திருக்கும். இந்தப் படத்தின் வசனங்களையும் அவரே எழுதியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் காமெடி வேடம் ஒன்றிலும் நடித்திருக்கிறார்.
அந்த வேடத்துக்கு அவர் கொடுத்திருக்கும் பெயர், சமோசா.
"வாரணம் ஆயிரம்' மூலம் தமிழில் அறிமுகமான சமீரா ரெட்டி, இப்போது அஜீத்துடன் "அசல்' படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பிரான்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வருகிறது. "பிரான்சில் இருக்கும் இந்திய தூதகரத்தில் கலாசார பிரிவில் பணியாற்றுபவராக நடிக்கிறேன். இதுவரை செய்யாத ஒரு கேரக்டர். மேலும் துணிச்சலான கேரக்டர். ஹைடெக் தோற்றத்தில் வருகிறேன். பாரீஸ், லயான் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது பிரெஞ்ச் மொழியில் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பள்ளியில் பிரெஞ்ச் பாடம் படித்தது இப்போது கை கொடுத்து விட்டது. எளிமையாக பேசி நடிக்க முடிந்தது. "வாரணம் ஆயிரம்' படத்தைப் போல் அசலும் நிறைவான படமாக இருக்கும். தமிழில் நிறைய படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது' என்றார் சமீரா.
வெளிநாட்டு சூட்டிங்கை முடித்து திரும்பிய அசல் படக்குழுவினர் சமீப காலமாக சென்னையில் முகாமிட்டு சூட்டிங்கை நடத்தி வருகிறார்கள். ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்த சூட்டிங்கில் அஜித், பாவனா பங்கேற்று நடித்தனர். முக்கியமான காட்சியொன்று தி.நகரில் உள்ள சிவாஜி கணேசனின் வீட்டில் படமாக்கப்பட்டுள்ளது. அசல் படத்தின் ஒட்டுமொத்த காட்சிகளும் படமாக்கப்பட்டு முடித்துள்ள நிலையில் தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. பொங்கலுக்கு அசலை வெளியிட திட்டமிட்டிருக்கும் அசல் குழுவினர், இதற்கான அறிவிப்பை வெளியிடவும், அசல் குறித்து பகிர்ந்து கொள்ளவும் பத்திரிகையாளர்களை சந்திக்கவிருக்கிறார்கள். அநேகமாக டிசம்பர் 15ம்தேதி அஜித் மற்றும் அசல் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்திப்பார்கள் என தெரிகிறது.
எந்த சுரேஷ் என்று புருவம் சுருக்குகிறவர்களுக்கு... பன்னீர் புஷ்பங்கள் படத்தில் அறிமுகமாகி தடதடவென 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அதே பழைய ஹீரோ சுரேஷ்தான்.
வழுக்கை விழுந்து வாழ்க்கையில் குடும்பம், மனைவி, பிள்ளைகள் என செட்டிலானவர் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார், படம் அசல்.
சிவாஜி புரொடக்ஷன் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அதிகமும் வெளிநாடுகளில் நடந்து வருகிறது. படத்தை சரண் இயக்குகிறார். இதுவொரு பழிவாங்கும் கதை. அஜித்துக்கு ஜோடி சமீரா ரெட்டி.
இந்தப் படத்தில் சுரேஷ் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். கலர்ஃபுல் விக்குடன் அவரது கெட்டப்பே மிரட்டுகிறது. இனி தொடர்ந்து படங்களில் நடிப்பதென முடிவு செய்திருக்கிறாராம்.
seller: Sir vettaikaran film ticket evloku sales panlam.... yarum vanga matranga..
Theatreowner: rs.10 kudunga apa naraya sales agum
seller: Aiyo apa namaku collection varathey
Theatreowner: ellarum theatre kula poita.. half an hour apram....... veliya porathuku
ticket kudunga .....apram parunga antha ticket 500 rs varaikum
pogum....
seller: super idea sir
அஜீத்தை மாற்றிய சூப்பர் ஸ்டாரின் வைர வார்த்தைகள்!
“நமக்கு எது விதிக்கப்பட்டிருக்கோ அது தானா கிடைக்கும்” - அஜீத்தை மாற்றிய சூப்பர் ஸ்டாரின் வைர வார்த்தைகள்!இது பற்றி முன்னமே உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும், நண்பர்களின் தளங்களில் படித்திருப்பீர்கள். இருப்பினும் அது ஒரு ஆச்சரியமான விஷயம் என்பதால் ஒரு சிறிய ரீவைண்ட். “சூப்பர் ஸ்டார் கற்கும் பாடம்” பற்றிய பதிவில் நண்பர் ஒருவர் அளித்த கமெண்டை பார்த்த பிறகு எனக்கு இது தோன்றியது. பிற்சேர்க்கையாக தரவேண்டியதை அப்படியே ஒரு தனி பதிவாக தருகிறேன்.
அஜீத்திடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
தொடர் தோல்வியால் துவண்டு போயிருந்த அஜீத்திடம், பில்லா ரீமேக் ஐடியாயாவை சிலர் கூறினார்கள். இதையடுத்து சூப்பர் ஸ்டாரிடம் அனுமதி கேட்டு அவரின் ஆசி பெறுவதற்கு அவரை நேரில் சந்தித்தார் அஜீத்.
பின்பு அஜீத்திடம், “நமக்குன்னு எது விதிக்கப்பட்டிருக்கோ அது நமக்கு தவறாம கிடைக்கும். அதனால் நாம் எதுக்கும் அலட்டிக்கவோ கவலைப்படவோ கூடாது. நம்ம வேலைய நாம பாட்டுக்கு செஞ்சிகிட்டு போய்கிட்டே இருந்தா போதும். மத்தது தானா நடக்கும்” என்றார்.
மனநிறைவுடன் வீடு திரும்பிய அஜீத், ரஜினி பரிசளித்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார். முதலில் புத்தகத்தை ஆர்வமின்றி படிக்க துவங்கிய அஜீத் பிறகு, பக்கங்களை புரட்ட புரட்ட அசந்தேபோய் விட்டார். அவருக்கு தேவை எதுவோ அது அந்த புத்தகத்தில் கிடைத்தது. புத்தகத்தை முடித்த போது அவர் முழுதும் மாறிவிட்டிருந்தார். “இந்த மாற்றத்திற்கு காரணம் ரஜினி சார் தான்” என்றும் வெளிப்படையாக கூறினார்.
வாழ்க்கையிலும் கேரியரிலும் சூப்பர் ஸ்டார் கூறியதை ஓரளவு பின்பற்ற துவங்கினார். அவர் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் மெல்ல நடக்க ஆரம்பித்தது. பில்லா சூப்பர் ஹிட்டானது. அஜீத் தந்தையானார். (பில்லா ரிலீசின்போது தொலைக்காட்சிகளில் விரிவான பேட்டியளித்தார் அஜீத். அதில் சூப்பர் ஸ்டார் பற்றியும் அதில் நிறைய பேசினார்.)
இப்போது இந்த அஜீத் அதிகம் பேசுவதில்லை. பில்டப்புகளில் ஈடுபடுவதில்லை. இந்த அஜீத்தை அனைவருக்கும் பிடித்திருக்கிறது.
திருவள்ளுவர் கூறுவது போல,
“அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்” - குறள்
பொருள்: “அறிவிலும் அனுபவத்திலும் தம்மிலும் சிறந்த பெரியோரை போற்றி, மதித்து, தமது நட்பாக்கிகொள்ளுதல் என்பது பெறுவதற்ககரிய பேறுகள் எல்லாவற்றிலும் அரியது”
சூப்பர் ஸ்டாருடன் இவரது அணுகுமுறை விஷயத்தில் இந்த குறள் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
மலேசியா மற்றும் பாரிஸில் படப்பிடிப்பை நிறைவு செய்த அசல் யூனிட் அடுத்து லேண்ட் ஆனது சென்னையில். சென்னை அண்ணாமலைபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. பிறகு படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு மாற்றப்பட்டது.
இங்குதான் அந்த புகழ்மிக்க சந்திப்பு நடந்தது. அசல் படப்பிடிப்பு நடந்த நேரம் சுறா படப்பிடிப்புக்காக விஜய்யும் அங்கிருந்திருக்கிறார். இதனை கேள்விப்பட்ட அஜித் விஜய்யை சென்று சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். ஏறக்குறைய மூன்று வருடங்களுக்குப் பின் நடந்த சந்திப்பு இது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவிலும் சில காட்சிகளை எடுக்க சரண் திட்டமிட்டுள்ளார். சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
அஜித் - சில 'அசல்' பக்கங்கள்
விபத்தில் பாதிக்கபட்டது காரணமாக அவரால் சினிமாவில் முழு கவனம் செலுத்த முடியாததும் ஒரு காரணம். அதன் பின்னர், ரஜினி அவர்களின் ஆசியோடு 'பில்லா'வில் மீண்டும் எழுச்சி பெற்ற அஜித்துக்கு அதன் பின் வந்த 'ஏகன்' ஒரு சிறு சறுக்கல்.
கவுண்டமணி: ச்சே.. போன எடுத்தா நச்சு நச்சுன்னுராங்கப்பா.. ஏதோ வில்லுன்னு விஜய் படமாம்.. அத விஜய் ரசிகங்களாலேயே பார்க்க முடியலையாம்.. என்ன பாக்க சொல்றாங்க.. அட இது பரவா இல்ல.. சோசியல் மேட்டர், பண்ணிக்கலாம்.. ஆனா விஜய் பாட்டுக்கெல்லாம் என்ன ஆட சொல்றாங்கப்பா.. நான் என்ன விஜய் மாதிரி ஆடுகாலியா இல்ல பரதேசியா? ஒரே குஷ்டமப்பா.. ச்சீ... கஷ்டமப்பா..
விஜய்: ங்கண்ணா.. போன் வயரு பிஞ்சு ஒரு வாரம் ஆகுதுங்கன்னா..
கவுண்டமணி: ஹே ஹே.. ஹெய்ஹெய்.. டே டப்சா தலையா.. இது செல்போன்டா.. உன்னயல்லாம் ஹீரோவா போட்டு படம் எடுக்குறான் பாரு அவன சொல்லணும்..
விஜய்: போங்கண்ணா.. உங்களுக்கு ஒரே குறும்பு.. கம்பெனி சீக்ரட் எல்லாம் வெளியில சொல்லிக்கிட்டு.. சரி சரி.. இப்போ நம்ம பாட்ட கேளுங்க..
"ஹே ராமா ராமா ராமன்கிட்ட வில்ல கேட்டேன்
பீமா பீமா பீமன்கிட்ட கதைய கேட்டேன்
முருகு முருகு முருகன்கிட்ட மயில கேட்டேன்..
ஈசன் ஈசன் ஈசன் கிட்ட மலைய கேட்டேன்"
கவுண்டமணி: நிறுத்துடா ஆப்பிரிக்கா வாயா.. இவ்வளவு கேட்டியே.. பிரபுதேவாகிட்ட கதை என்னன்னு கேட்டியா?
விஜய்:??!
சிம்பு சமீப காலமாக தீவிர அஜீத் ரசிகராகி விட்டார். தனது படம் ஒன்றில் அஜீத் ரசிகராகவே அவர் நடித்திருந்தார்.இந்த நிலையில் தற்போது அஜீத்துடன் இணைந்து ஒரு படத்தில் தலை காட்டுகிறார்.
சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வரும் படம் அசல். அஜீத் நாயகன். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு அஜீத்துடன் இணைந்து ஆடுகிறாராம் சிம்பு. படத்தின் ஹைலைட்டாக இந்தப் பாடல் இருக்குமாம்.
ஏற்கனவே சில ஹீரோக்களுக்காக பாடல்கள் பாடியுள்ளார் சிம்பு. ஆனால் தற்போதுதான் இன்னொரு முன்னணி ஹீரோவுடன் இணைந்து திரையில் தோன்றுகிறார்.
அதேபோல தனது நண்பரான எஸ்.ஜே.சூர்யா தெலுங்கில் இயக்கி வரும் புலி படத்தில், சூர்யாவின் கோரிக்கைக்கேற்ப ஒரு பாடலுக்கு ஆடியுள்ளாராம் சிம்பு. படத்தின் நாயகன் பவன் கல்யாணுடன் இணைந்து இந்த பாடலில் ஆடுகிறாராம் சிம்பு.
இந்த புலி படத்திற்கு இன்னொரு பின்னணிக் கதை உள்ளது. முதலில் இதை தமிழில் விஜய்யை வைத்துத்தான் இயக்குவதாக இருந்தார் சூர்யா. விஜய்யும் சம்மதித்து எல்லாம் ரெடியான நிலையில் திடீரென நடிக்க மறுத்து விட்டார் விஜய்.
என்ன காரணம் என்று அப்போது கூறப்பட்டது என்றால் – புலி கதையில் சிம்புவின் ஆலோசனையின் பேரில் பல மாற்றங்களை செய்திருந்தார் எஸ்.ஜே.சூர்யா. இதனால் அப்செட் ஆன விஜய் புலிக்கு கும்பிடு போட்டு விட்டாராம்.
அசல் - வேட்டைக்காரன் போட்டியில்லை? |
| |
வருகிற பொங்கலுக்கு அஜீத்தின் அசலும்,
விஜயின் வேட்டைக்காரனும் மோதும்என்று
ரசிகர்கள் நினைத்திருக்க, அது நடக்கப்
போவதில்லை என்கிறதுகோடம்பாக்கம்.
விஜய் படத்தை டிசம்பர் மாதமே ரிலீஸ்
செய்துவிடலாமாஎன்ற யோசனையில்
இருக்கிறதாம் சன் பிக்சர்ஸ். கடந்த சில
படங்களால்சன்னுக்குப் பெரும் நஷ்டம்.
ஆனால் வெளிக்காட்டிக்கொள்ள
முடியாதசூழ்நிலை. இந்த நிலையில்
அசலுடன் வேட்டைக்காரனை
வெளியிட வேண்டாம்என்ற உறுதியான
முடிவை எடுத்துவிட்டார்களாம். ஆனால்,
விஜய் தரப்போ பொங்கலுக்கு வரட்டுமே
என்று தனது விருப்பத்தைத் தெரிவிக்க,
அதையும் தட்ட முடியாமல் தவிக்கிறது சன் வட்டாரம்.
இதற்கிடையில் இவர்கள் வாங்கிய
கண்டேன் காதலுக்குரசிகர்களிடமிருந்து
கிரீன் சிக்னல் கிடைத்திருப்பதால்
பொங்கல்வரை அதையே வைத்து
ஓட்டலாமேஎன்ற எண்ணத்திற்கும்
வந்திருக்கிறார்களாம். போகிற போக்கைப்
பார்த்தால் பொங்கல் காரமாக இருக்கும் போலதான்தெரிகிறது.
அஜீத்தின் 'அசல்' பட பாடல் ஒலிப்பதிவு: பரத்வாஜின் புதிய ஸ்டூடியோவில் நடந்தது
இசையமைப்பாளர் பரத்வாஜ் டி.நகர் ராஜமன்னார் தெருவில் ஜே.ஜே. ஸ்டூடியோ என்ற பெயரில் புதிதாக ரெக்கார்டிங் ஸ்டூடியோ தொடங்கியுள்ளார். அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய இந்த ஸ்டூடியோவை இயக்குநர் சரண் திறந்து வைத்தார். தங்கர்பச்சான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அஜீத்தின் அசல் படத்தின் படப்பிடிப்பிற்காக பிரான்ஸ் சென்றிருந்த இயக்குநர் சரண் திரும்ப வரும் வரை காத்திருந்து, நண்பர் சண் கையாலேயே புதிய ஸ்டூடியோவை திறக்கச் செய்து, முதன் முதலாக அசல் படத்தின் பாடலை ஒலிப்பதிவு செய்தார். பரத்வாஜ்.
இருவரும் இணைந்து வெற்றிப் பாடல்களைக் கொடுத்த கூட்டணி என்பதால் செண்டிமென்ட்டாக இந்த திறப்பு விழாவை நடத்தியுள்ளனர்.
பரத்வாஜின் துணைவியார் பெயர் ஜெயஸ்ரீ. மகள் பெயர் ஜனனி. இருவரின் முதல் எழுத்தை வைத்து ஜே.ஜே. ஸ்டூடியோ என்று பெயர் வைத்துள்ளார். சரண் கூட்டணியில் ஜே.ஜே. என்ற பெயரில் படம் இசையமைத்ததும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஆ.கே.வின் வாங்க சாப்பிடலாம் ஹோட்டல் அருகிலேயே இந்த ஸ்டூடியோ உள்ளது. தற்போது அசல், களவாடிய பொழுதுகள், நந்தி, காதலுக்கு மரணமில்லை ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் பரத்வாஜ்.

டைரக்டர் சரண் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படம் அசல். சிவாஜி புரொடக்ஷன் சார்பில் நடிகர் பிரபு தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார்? என இன்னமும் முடிவாகவில்லை. படத்தின் தொடக்கவிழா பூஜை இன்று (8ம்தேதி) சென்னை தி.நகர் செவாலியே சிவாஜிகணேசன் சாலையில் உள்ள அன்னை இல்லத்தில் பிரமாண்டமாக நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த், தனது மகள் சவுந்தர்யாவுடன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். அவர் பேசுகையில், என் மகளுடன் எந்த சினிமா விழாவுக்கும் சென்றதில்லை. முதன் முதலாக சவுந்தர்யாவுடன் இணைந்து அன்னை இல்லத்திற்கு இந்த பூஜைக்கு வரவேண்டும் என்று வந்தேன். அவ்வளவு ராசியான வீடு இது. இந்த வீட்டில் இருந்துதானே சிவாஜி சார், வீரபாண்டிய கட்டபொம்மன், பாலும் பழமும், திருவிளையாடல் உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்புக்கு கிளம்பி சென்றார் என்று நினைக்கும்போதே, பூஜை போடப்படும் அசல் படம் எத்தனை வெற்றி பெறும் என்பது தெரிகிறது. இங்குதான் சந்திரமுகி படத்துக்கும் பூஜை போட்டோம். ஆனால் ரொம்ப சிம்பிளாக பூஜை போடப்பட்டு, அது வெற்றி கண்டது. இன்று அஜித்தின் அசல் இவ்வளவு பிரமாண்டமாக பூஜை போடப்பட்டுள்ளது. அதன் வெற்றி சந்திரமுகியை விட பெரிதாக இருக்க வாழ்த்துகிறேன், என்றார்.
நடிகர் பிரபு பேசுகையில், பில்லா படத்தில் இணைந்து நடிக்கும்போது தம்பி அஜித்திடம் சிவாஜி புரொடக்ஷனுக்கு ஒரு படம் பண்ணணும்னு கேட்டேன். தம்பி சரின்னு ஒத்துக்கிச்சு. இதோ.. டைரக்டர் சரண் இயக்கத்தில் அசல் படத்தை ஆரம்பிச்சிட்டோம். அசல் பட கதைக்காகவோ, கால்ஷீட்டுக்காகவோ ஒரு நாளும் அஜித்தை சூட்டிங் ஸ்பாட்டிலோ, வீட்டிலோ போய் நான் பார்க்கவில்லை. நான் வருகிறேன் என்றபோது அவரே சிவாஜி சார் வீட்டில் வந்து நான் கதை கேட்கிறேன் என்று அன்னை இல்லம் வந்தார். எல்லோரும் விரும்பியதாலும், அப்பாவும்- அம்மாவும் கூடவே இருக்கிற மாதிரி உணர்வு இருக்கிறதாலும் நானும், அண்ணன் ராம்குமாரும் முடிவு செய்து அசல் பூஜையை இங்கேயே வைத்து விட்டோம். இயக்குனர் சரண், அஜித், இசையமைப்பாளர் பரத்வாஜ், கவிஞர் வைரமுத்து, யூகி சேது, கேமராமேன் பிரசாந்த், எடிட்டர் ஆண்டனி, ஆர்ட் டைரக்டர் எம்.பிரபாகரன் என்று வெற்றி கூட்டணி அமைந்திருக்கும் இந்த படத்தின் டைட்டிலுக்கு மேல், அஜித் பெயருக்கு மேல் சிவாஜி புரொடக்ஷன் பிரபு வழங்கும் அவரே போட்டுக் கொள்ளச் சொன்னதால்தான் என் பெயரை அஜித் பெயருக்கு மேல் போட்டுக் கொண்டேன். இதற்காக இங்கு குழுமியிருக்கும் அஜித் ரசிகர்கள் என் மீது கோபம் கொள்ளக் கூடாது என கிண்டலாக பேசிய பிரபு, இந்த படத்தில் டைரக்டர் சரணும், அஜித்தும் விரும்பினால் நானும் ஏதாவது ஒரு ரோலில் நடிப்பேன் என்று விளையாட்டாகவும் பேசினார்.
விழாவில் கவிஞர் வைரமுத்து, ஏவி.எம்.சரவணன், நடிகர்கள் சத்யராஜ், சூர்யா, கார்த்தி, இயக்குனர்கள் கே.பாலசந்தர், பி.வாசு, ஆர்.வி.உதயகுமார், ஜெயம் ராஜா, எடிட்டர் மோகன், ஷாலினி அஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அசல் பட பூஜைக்கு அஜித் வந்திருக்கும் தகவல் கிடைத்த ஏராளமான ரசிகர்கள் அன்னை இல்லம் பகுதியில் திரண்டதால், அங்கு காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை டிராபிக்ஜாம் ஏற்பட்டது.
பொதுவாக போட்டோசெஷனை தவிர்ப்பவர் அஜித். ஆனால், அசலுக்காக சரணின் வேண்டுகோளை ஏற்று தல போட்டோசெஷனுக்கு சம்மதித்திருக்கிறார். சமீரா ரெட்டியும் இவரும் இடம்பெற்ற போட்டோசெஷன் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது.
படத்திலிருந்து ஹாரிஸ் ஜெயராஜை மாற்றிவிட்டு யுவனை ஒப்பந்தம் செய்ததாக சொல்லப்பட்ட தகவலும் உண்மையில்லை. சரண் தனது ஆஸ்தான இசையமைப்பாளர் பரத்வாஜிடம்தான் அசலுக்கு இசையமைத்துதர கேட்டிருக்கிறார். காதல்மன்னனில் இணைந்து பணியாற்றத் தொடங்கிய சரணும், பரத்வாஜும் மோதி விளையாடு படத்தில் பிரிந்தனர். மோதி விளையாடு படத்துக்கு கலோனியல் கஸின்ஸ் இசையமைத்துள்ளனர்.
செல்வராகவன் - யுவன், கௌதம் - ஹாரிஸ் போல இதுவும் நிரந்தரப் பிரிவு என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அது தற்காலிகமானது. பரத்வாஜின் சம்மதத்துடனே மோதி விளையாடு படத்துக்கு வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்தார் சரண்.
சரண், அஜித், பரத்வாஜ் கூட்டணியின் காதல்மன்னன், அமர்க்களம், அட்டகாசம் ஆகிய மூன்று படங்களுமே வெற்றி பெற்றதால் அசலுக்கும் அதே கூட்டணி இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது அனைவரின் விருப்பம். ரசிகர்களின் விருப்பமும் அதுதான்.
தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் தற்போது தமிழ் படம் என்ற படத்தை தயாரித்து வருகிறது. இதையடுத்து அஜித்தின் ஐம்பதாவது படத்தையும் கிளவுட் நைன் தயாரிக்கிறதாம்.
அஜித் தற்போது நடித்துவரும் அசல் அவரது 49வது படம். ஐம்பதாவது படத்தை தயாரிக்க முன்னணி தயாரிப்பாளர்கள் முட்டி மோதுகிறார்கள். அதில் முதலில் இருப்பவர் தாணு.
ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் அஜித்தின் ஐம்பதாவது படத்தை தயாரிக்கும் விருப்பம் இருக்கிறது. தற்போது தயாநிதியின் பெயரும் அடிபடுவதால், அவருக்கே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.
ஆதவனுக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட கே.எஸ்.ரவிக்குமார் அஜித்தின் ஐம்பதாவது படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளது. அசல் படத்துக்காக வெளிநாடு சென்றிருக்கும் அஜித் திரும்பி வந்தால் அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைக்கலாம்.
அஜித் குமார்
நடித்த திரைப்படங்கள்
| ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2009 | 50வது திரைப்படம் | ||
| 2009 | அசல் | படப்பிடிப்பில் | |
| 2008 | ஏகன் | சிவா | |
| 2007 | பில்லா 2007 | பில்லா/வேலு | |
| 2007 | கிரீடம் | சக்திவேல் | |
| 2007 | ஆழ்வார் | ||
| 2006 | வரலாறு | ||
| 2006 | திருப்பதி | ||
| 2006 | பரமசிவன் | ||
| 2005 | ஜீ | ||
| 2004 | ஜனா | ஜனா | |
| 2004 | அட்டகாசம் | குரு/ ஜீவா | |
| 2003 | என்னை தாலாட்ட வருவாளா | ||
| 2003 | ஆஞ்சநேயா | ||
| 2002 | வில்லன் | ||
| 2002 | ரெட் | ||
| 2002 | ராஜா | ராஜா | |
| 2001 | பூவெல்லாம் உன் வாசம் | ||
| 2001 | தீனா | தீனா | |
| 2001 | அசோகா | ||
| 2001 | சிட்டிசன் | ||
| 2000 | முகவரி | ||
| 2000 | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | ||
| 2000 | உன்னை கொடு என்னை தருவேன் | ||
| 1999 | நீ வருவாய் என | ||
| 1999 | தொடரும் | ||
| 1999 | உன்னை தேடி | ||
| 1999 | ஆனந்த பூங்காற்றே | ||
| 1999 | அமர்க்களம் | (மனைவி ஷாலினியுடன்) | |
| 1999 | வாலி | ||
| 1998 | காதல் மன்னன் | ||
| 1998 | உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் | ||
| 1998 | உயிரோடு உயிராக | ||
| 1998 | அவள் வருவாளா | ||
| 1997 | ரெட்டை ஜடை வயசு | ||
| 1997 | ராசி | ||
| 1997 | பகைவன் | ||
| 1997 | நேசம் | ||
| 1997 | உல்லாசம் | ||
| 1996 | வான்மதி | ||
| 1996 | மைனர் மாப்பிள்ளை | ' | |
| 1996 | கல்லூரி வாசல் | ||
| 1996 | காதல் கோட்டை | ||
| 1995 | ராஜாவின் பார்வையினில் | ||
| 1995 | ஆசை | ||
| 1994 | பாசமலர்கள் | ||
| 1994 | பவித்ரா | ||
| 1993 | அமராவதி | ||
| 1992 | பிரம்ம புஸ்தகம் | தெலுங்கு(அறிமுகம்) |
அசல்
| அசல் | |
| இயக்குனர் | சரண் |
|---|---|
| தயாரிப்பாளர் | ராம்குமார் பிரபு |
| கதை | சரண் யூகி சேது |
| Narrated by | சரண் |
| நடிப்பு | அஜித் குமார் சமீரா ரெட்டி பாவனா பிரபு ராஜீவ் கிருஷ்ணா சம்பத் பிரதிப் ராவட் யூகி சேது ஷாரூக்கான் |
| இசையமைப்பு | பரத்வாஜ் வை - கின்ஸ் |
| ஒளிப்பதிவு | பிரசாந் |
| படத்தொகுப்பு | அந்தோனி |
| வினியோகம் | சிவாஜி பிலிம்ஸ் |
| வெளியீடு நாட்கள் | நவம்பர் 27, 2009 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அசல் சரணின் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டில் வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படம் ஆகும்[1]. இந்த படத்தை சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அஜித் குமார், சமீரா ரெட்டி, பாவனா மற்றும் பிரபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். சரண் காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் ஆகிய அஜித்தின் வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது, இதனால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அசல் படத்தின் கதையை யூகி சேது எழுதுகிறார், யூகி சேது வில்லன் படத்திற்கு கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது . ரஜினிகாந்த் இந்த படத்தை ஏப்ரல் 8 வெளியிட்டார். [2]2009 தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளிவரவிருக்கிறது.
பொருளடக்கம்[மறை] |
வகை
கமர்ஷியல், மசாலாப்படம்
பாத்திரங்களும் தொழிநுட்ப கலைஞர்களும்
பாத்திரங்கள்
| நடிகர்கள் | பாத்திரம் |
|---|---|
| அஜித் குமார் | |
| சமீரா ரெட்டி | |
| பாவனா | |
| பிரபு | |
| சாருக் கான் | |
| ராஜீவ் கிருஷ்ணா[3] | |
| சம்பத் | |
| பிரதிப் ராவட் | |
| யூகி சேது | |
| ஆதித்யா | |
| கெலி டொர்ஜு | |
| கரண் மீயோ சப்புரு | |
| கொயின் மித்ரா | ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றம் |
தொழிநுட்ப கலைஞர்கள்
சிவாஜி பிலிம்ஸ் படத்தை தயாரிக்கிறது. முதல் மூன்று படங்களுக்கு இசையமைத்த பரத்வாஜ் நான்காவது முறையாக அஜித், சரண் கூட்டணியுடன் ஒன்றிணைகிறார்.
அஜித் ஜோடியாக சமீராரெட்டி மற்றும் பாவனா நடிக்கின்றனர். சரணின் பிற படங்கள் போலவே இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார். நீரவ்சாவின் அசிஸ்டெண்ட் பிரசாந்த் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் கருணாகரன் காஸ்ட்யூம்.படத்தில் பிரபுவும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இப் படத்தில் பிரபல இந்தி நடிகர் சாருக் கான் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
பாடல்
- Name = அசல்
- Type = பாடல் ஒலிநாடா
- Artist = பரத்வாஜ்
வை - கின்ஸ் - Cover =
- Alt =
- Released =
- Recorded = 2009
- Genre = தமிழ் பட பாடல்
- Length =
- Label =
- Producer = ராம்குமார்
பிரபு - Reviews =
இப் படத்திற்கு ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணையும் பரத்வாஜ் மற்றும் ஸ்காட்லாந்து இசை குழுவினரான வை - கின்ஸ் இசை அமைக்கவுள்ளர்.
| பாடல் | பாடியவர்கள் | வரிகள் |
|---|---|---|
| இவன் கண்ணுக்குள் இருக்கு | சங்கர் மகாதேவன் | வைரமுத்து |
| சிலம்பரசன் | வைரமுத்து | |
| கனவா நினைவா[4] | வைரமுத்து | |
| வைரமுத்து | ||
| வைரமுத்து | ||
| வைரமுத்து | ||
| வைரமுத்து | ||
| வைரமுத்து | ||
படப்பிடிப்பு
மே 22 படப்பிடிப்பு டோக்கியோவில்
முதல்கட்ட படப்பிடிப்புக்காகப் அஜீத்துக்கு ராசியான நாடான மலேசியாவுக்கு பறந்துள்ளது அசல் குழு.
போட்டோ ஷூட்
இப்படத்திற்கான போட்டோ ஷூட் மே 04 துவங்குகிறது. அஜித் மற்றும் சமீரா ரெட்டி இதில் கலந்து கொள்கின்றனர்.
ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணையும் சரண்
“ஏழு வருஷத்துக்கு முன் எனக்குள் விதைப்போட்ட ‘கரு’தான் இப்போ ‘அசல்’ கதையாக வேர்விட்டு நிற்கிறது. நம்பிக்கை துரோகத்திற்கு எதிரா வெடித்து கிளம்பும் ஒருவனின் கதைதான் இது.
வில்லனை பலிவாங்குறதோட சுபம் போடுற வழக்கமான படமா இது இருக்காது. டான், இண்டர்நேஷனல் சேஸிங்னு இன்ட்ரஸ்டிங்கான திரைக்கதையை ட்ரை பண்ணியிருக்கேன்.”பாட்ஷா ரஜினி மாதிரியான கேரக்டர்தான் அஜித்துக்கு. படம் வந்தபிறகு அஜித்தை சூப்பர் ஸ்டாரா கொண்டாடப்போவது நிச்சயம். கெட்டப்,மேனரிசம்,ஸ்டைல்னு புது அஜித்துக்கு நிறையவே தீனி இருக்கு”. கிரீஸ்,துருக்கி,இத்தாலி,துபாய்,சிங்கப்பூர்னு பல இடங்களில் படமாகிறது. மே மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பம்.
படத்தில் அஜித்துடன் மோத இருப்பது மொத்தம் 6 வில்லன்கள்.[5]இந்த அரை டஜன் வில்லன்களையும் நெதர்லாந்து, துருக்கி, இத்தாலி, ஹங்கேரி என்று பறந்து சென்று பழிவாங்குகிறார் அஜித்.நடுவே சமீரா ரெட்டி மற்றும் பாவனாவுடனான சஹானா சாரலும் உண்டு.இசை பரத்வாஜ். படம் முழுக்க வெட்டருவா மீசையுடன் வருகிறார் அஜித்.இந்த புதிய தோற்றம் படத்துக்கே புதிய லுக்கை தரும் என்றார் சரண். அஜித்துக்காக சிலம்பரசன் ஒரு பாடலுக்கு வாய்ஸ் கொடுக்கிறார்.[6]













