ASAL film latest news

அசல் தொடர்பான தமிழ் செய்திகள், வீடியோ, படங்கள்.

அசல் படத்தில் சுரேஷ்




எந்த சுரேஷ் என்று புருவம் சுருக்குகிறவர்களுக்கு... பன்னீர் புஷ்பங்கள் படத்தில் அறிமுகமாகி தடதடவென 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அதே பழைய ஹீரோ சுரேஷ்தான்.

வழுக்கை விழுந்து வாழ்க்கையில் குடும்பம், மனைவி, பிள்ளைகள் என செட்டிலானவர் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார், படம் அசல்.

சிவா‌‌ஜி புரொடக்ஷன் தயா‌ரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அதிகமும் வெளிநாடுகளில் நடந்து வருகிறது. படத்தை சரண் இயக்குகிறார். இதுவொரு பழிவாங்கும் கதை. அ‌‌ஜித்துக்கு ‌ஜோடி சமீரா ரெட்டி.

இந்தப் படத்தில் சுரேஷ் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். கலர்ஃபுல் விக்குடன் அவரது கெட்டப்பே மிரட்டுகிறது. இனி தொடர்ந்து படங்களில் நடிப்பதென முடிவு செய்திருக்கிறாராம்.

0 விமர்சனம்:

Post a Comment