ASAL film latest news

அசல் தொடர்பான தமிழ் செய்திகள், வீடியோ, படங்கள்.

அஜீத்தின் 'அசல்' பட பாடல் ஒலிப்பதிவு: பரத்வாஜின் புதிய ஸ்டூடியோவில் நடந்தது




இசையமைப்பாளர் பரத்வாஜ் டி.நகர் ராஜமன்னார் தெருவில் ஜே.ஜே. ஸ்டூடியோ என்ற பெயரில் புதிதாக ரெக்கார்டிங் ஸ்டூடியோ தொடங்கியுள்ளார். அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய இந்த ஸ்டூடியோவை இயக்குநர் சரண் திறந்து வைத்தார். தங்கர்பச்சான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அஜீத்தின் அசல் படத்தின் படப்பிடிப்பிற்காக பிரான்ஸ் சென்றிருந்த இயக்குநர் சரண் திரும்ப வரும் வரை காத்திருந்து, நண்பர் சண் கையாலேயே புதிய ஸ்டூடியோவை திறக்கச் செய்து, முதன் முதலாக அசல் படத்தின் பாடலை ஒலிப்பதிவு செய்தார். பரத்வாஜ்.

இருவரும் இணைந்து வெற்றிப் பாடல்களைக் கொடுத்த கூட்டணி என்பதால் செண்டிமென்ட்டாக இந்த திறப்பு விழாவை நடத்தியுள்ளனர்.

பரத்வாஜின் துணைவியார் பெயர் ஜெயஸ்ரீ. மகள் பெயர் ஜனனி. இருவரின் முதல் எழுத்தை வைத்து ஜே.ஜே. ஸ்டூடியோ என்று பெயர் வைத்துள்ளார். சரண் கூட்டணியில் ஜே.ஜே. என்ற பெயரில் படம் இசையமைத்ததும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஆ.கே.வின் வாங்க சாப்பிடலாம் ஹோட்டல் அருகிலேயே இந்த ஸ்டூடியோ உள்ளது. தற்போது அசல், களவாடிய பொழுதுகள், நந்தி, காதலுக்கு மரணமில்லை ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் பரத்வாஜ்.

0 விமர்சனம்:

Post a Comment