ASAL film latest news

அசல் தொடர்பான தமிழ் செய்திகள், வீடியோ, படங்கள்.

அசல் புதிய தகவல்கள்


பொதுவாக போட்டோசெஷனை தவிர்ப்பவர் அ‌ஜித். ஆனால், அசலுக்காக சரணின் வேண்டுகோளை ஏற்று தல போட்டோசெஷனுக்கு சம்மதித்திருக்கிறார். சமீரா ரெட்டியும் இவரும் இடம்பெற்ற போட்டோசெஷன் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது.

படத்திலிருந்து ஹா‌ரிஸ் ஜெயராஜை மாற்றிவிட்டு யுவனை ஒப்பந்தம் செய்ததாக சொல்லப்பட்ட தகவலும் உண்மையில்லை. சரண் தனது ஆஸ்தான இசையமைப்பாளர் பரத்வா‌ஜிடம்தான் அசலுக்கு இசையமைத்துதர கேட்டிருக்கிறார். காதல்மன்னனில் இணைந்து பணியாற்றத் தொடங்கிய சரணும், பரத்வாஜும் மோதி விளையாடு படத்தில் பி‌ரிந்தனர். மோதி விளையாடு படத்துக்கு கலோனியல் கஸின்ஸ் இசையமைத்துள்ளனர்.

செல்வராகவன் - யுவன், கௌதம் - ஹா‌ரிஸ் போல இதுவும் நிரந்தர‌ப் பி‌ரிவு என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அது தற்காலிகமானது. பரத்வா‌ஜின் சம்மதத்துடனே மோதி விளையாடு படத்துக்கு வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்தார் சரண்.

சரண், அ‌ஜித், பரத்வா‌ஜ் கூட்டணியின் காதல்மன்னன், அமர்க்களம், அட்டகாசம் ஆகிய மூன்று படங்களுமே வெற்றி பெற்றதால் அசலுக்கும் அதே கூட்டணி இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது அனைவ‌ரின் விருப்பம். ரசிகர்களின் விருப்பமும் அதுதான்.

0 விமர்சனம்:

Post a Comment